தஜிகிஸ்தான் கூடுதலான ஒத்துழைப்பை இலங்கையிடமிருந்து எதிர்பார்க்கின்றது!

Wednesday, December 14th, 2016

வர்த்தகதுறை அபிவிருத்தி;க்காக தஜிகிஸ்தான் கூடுதலான ஒத்துழைப்பை இலங்கையிடமிருந்து எதிர்பார்ப்பதாக அந்நாட்டின் ஜனாதிபதி இமோமாலி ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தஜிகிஸ்தான் ஜனாதிபதி தலைமையிலான குழுவினருக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையுடனான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு நேற்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்றது. இதனைத் தொடர்ந்து தஜிகிஸ்தான் ஜனாதிபதி தலைமையிலான குழுவினருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்குமிடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையின் போதே தஜிகிஸ்தான் ஜனாதிபதி இமோமாலி ரஹ்மான் இதனை குறிப்பிட்டார்.

அவர் இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்: சுற்றுலாத்துறை, மாணிக்ககல் தொழில்த்துறை, ஆடைத்தொழில் துறை, விளையாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை மேம்படுத்துவது தொடர்பாக இலங்கையிடமிருந்து கூடுதலான பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம் என்றும் கூறினார்.

தஜிகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இதன்போது தஜிகிஸ்தான் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொருளாதார அபிவிருத்தியையும் சர்வதேச வர்த்தக செயற்பாட்டையும் மேம்படுத்துவதற்கான இலங்கை அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதாக கூறினார்.

பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பிலும் போதைப்பொருளை கட்டுப்படுத்துவதிலும் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு முக்கியமானது என்றும் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன இதன் போது சுட்டிக்காட்டினார்.

ce124d9ec5af0d86432db50661a61149_XL

Related posts: