தகுதியானர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு – ஜனாதிபதி !

Monday, March 9th, 2020

மக்கள் வாழக் கூடிய பாதுகாப்பான நாட்டினை கட்டியெழுப்புவதற்காக அரச பதவிகளில் தகுதியானவர்கள் மாத்திரமே நியமிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்கள் என்பது தொழில் வழங்கும் இடமல்ல. தேர்தலில் ஆதரவு வழங்கியவர்களை கொண்டு அரச நிறுவனங்களை நிரப்புவதற்கு பதிலாக தகுதியானவர்கள் நியமிக்க வேண்டும்.

அரச நிறுவனங்களுக்கான நியமிப்புகளை வழங்கும் போது தகுதியான நபர்களை தகுதியான பதவிக்கு நியமிப்பதென்பது நாட்டின் ஆட்சியாளர்களின் பொறுப்பாகும்.

குறித்த பதவிகளுக்கு நியமிக்கப்படும் நபர்கள்கள் தங்கள் பொறுப்புகளை சரியான முறையில் செய்து நாட்டின் அபிவிருத்தி, மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலில் போது அதிகளவான மக்கள் பாதுகாப்பான நாடு ஒன்றே கோரியிருந்தனர்.

அவ்வாறான பாதுகாப்பான நாட்டை கட்டியெழுப்புவதற்காக அனுபவம் கொண்ட நபர்களை அந்த பதவிக்கு நியமித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts:

எதிர்வரும் 11 ஆம் திகதி நாட்டின் முடக்க நிலை தளர்த்தப்பட்டாலும் மிகுந்த எச்சரிக்கை அவசியம் – எச்சரிக...
இலங்கை – சீனா இடையேயான உள்ளக விவகாரங்களில் எந்தவொரு வெளிநாடுகளின் தலையீட்டையும் அனுமதிக்க முடியாது ச...
முப்படை வீரர்களின் தினசரி ரேஷன் கொடுப்பனவை 1500 ரூபாவாக அதிகரிக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்!.