தகவல் ஆணைக்குழுவை அமைக்குமாறு பிரதமர் அறிவுறுத்தல்!

Tuesday, September 27th, 2016

 

நாட்டில் தகவல் ஆணைக்குழுவினை நிறுவுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடக அமைச்சிற்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இதன்படி இன்னும் சில தினங்களில் தகவல் ஆணைக்குழு அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பிரதி ஊடக அமைச்சர் கருணாசேன பரணவிதாரண தெரிவித்துள்ளார். தகவல் ஆணைக்குழுவினை அமைப்பது குறித்து நேற்று பிரதமருடன் பிரதி ஊடக அமைச்சர் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த ஆண்டுக்குள் ஊடக அகடமி ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடக தினத்தை முன்னிட்டு நாளையும் நாளை மறுதினமும் நடைபெறவுள்ள சர்வதேச மாநாடு ஒன்று கொழும்பில் நடத்தப்படவுள்ளது.இந்த மாநாடு குறித்து அறிக்கும் செய்தியாளர் சந்திப்பில் நேற்றைய தினம் கருனாசேன பரணவிதாரண இந்தக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.இந்த மாநாட்டில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல முக்கிய அதிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

ranil-at-suja

Related posts: