தகவல் அறியும் சட்டம்:  அடிப்படை உரிமையின் அங்கீகாரம்!

Friday, September 29th, 2017

சவால்கள் பலவற்றை எதிர்கொண்டு கடந்த வருடம் தகவல் அறியும் சட்டமூலத்தை சட்டரீதியான ஆவணமாக தாக்கல் செய்ய முடிந்ததாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சர்வதேச தகவல் அறியும் உரிமை தினத்தை முன்னிட்டு கொழும்பில் ஒழுங்கு செய்யப்பட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தகவல் அறியும் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமையாக உள்ளடக்க முடிந்தது.தகவல் அறியும் சட்டத்தின் முக்கியத்துவத்தை மக்கள் தற்போது உணர்ந்து வருகின்றனர்.தகவல் அறியும் சட்டம் காரணமாகவே கட்டுநாயக்கவில் சுட்டுக்கொல்லப்பட்ட ரொஷான் சானக்கவில் தாயாருக்கு தனது மகனின் மரணம் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பெற்றுக்கொள்ள முடிந்தது.அரச நிறுவனங்களில் 3 ஆயிரம் தகவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த துறை சம்பந்தமாக மேலும் 500 பேர் செயற்பட்டு வருகின்றனர் எனவும் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Related posts: