தகவல் அறியும் சட்டமூலம்: ஒரு சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது!

தகவல் அறியும் சட்டமூலத்தின் ஒரு சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணாக அமைந்துள்ளதாக உயர்நீதிமன்றம் நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள அரசியலமைப்பிற்கு முரணான சரத்துக்கள் திருத்தப்படாவிடின் தகவல் அறியும் சட்டமூலத்தை விசேட பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிட நேரிடும் என இன்றைய சபை நடவடிக்கைகள் ஆரம்பத்தில் சபாநாயகர் அறிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமாயின் சாதாரண பெரும்பான்மையால் சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் என சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ஊடகங்கள் அடக்கப்படமாட்டாது ; தேசிய ஊடக மையத்தின் தலைவர் பாகீர் மார்கார்!
256 மாணவர்கள் வடமாகாணத்தில் 9 பாடங்களில் ஏ சித்தி!
கொரோனா தீவிரமடைந்தால் பெரும் சிக்கலாகி விடும் – யாழ்.மாவட்ட நிலைமை குறித்து மருத்துவர் தேவநேசன் எச்ச...
|
|