தகவல் அறியும் சட்டமூலம் மூலம் அனைத்து விடயங்களையும் பெற்றுக்கொள்ளலாம்  – அரசாங்கம்!

Saturday, February 4th, 2017

தேசிய பாதுகாப்பு தகவல்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களின் விபரங்கள் மற்றும் அரச இரகசியங்கள் தவிர்ந்த ஏனைய விடயங்களை தகவல் அறியும் சட்டமூலம் மூலம் பெற்றுக்கொள்ளும் வகையில் தகவல் அறியும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு தேவையான தகவல்களை உரிய மொழியில் கோரும் போது அது தொடர்பான தகவல் வழங்கும் அதிகாரிகள் தகவல்களை வழங்க தவறின் அது தொடர்பாக தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கோ அல்லது அதன் மேன்முறையீட்டு குழுவுக்கோ முறையிடலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

தகவல் அறியும் சட்டமூலம் கொண்டுவருவதன் மூலம்  நாட்டின் தகவல் உரிமையை கொண்டுவருவோம் என  உருதியளித்தோம். அரசாங்கத்தின் தேர்தல் உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

இதன்மூலம் அரசாங்கம் மற்றும் அரசாங்க நிறுவனங்கள்  நிதியை பயன்படுத்தும் விதம், தீர்மானங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் மக்கள் தகவல்களை அறிந்து கொள்ள முடியும். இது தொடர்பான விடயங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவு வெளியிடப்படவுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே  அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான  கயந்த கருணாதிலக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

freedom-of-information-act

Related posts: