தகவல் அறியும் உரிமை தொடர்பில் மக்கள் புரிந்து வைத்திருப்பது அவசியம் – அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் !

Tuesday, February 28th, 2017

அரசாங்கம் வழங்கும் சரியான தகவல்களை அறிந்து கொள்ளக்கூடிய உரிமைகள் பற்றி மக்கள் புரிந்து வைத்திருப்பது அவசியம் என்று அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரிய தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைகள் தொடர்பான சட்டத்தின் உள்ளடக்கம் பற்றியும், அது பற்றிய சமூக உடன்பாடு தொடர்பாகவும் பேசும் நூலின் வெளியீட்டு விழாவில் அவர் உரையாற்றினார்.

தகவல் அறியும் உரிமைகள் தொடர்பான சட்டம் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய ஆணைக்குழுவை அமைத்து சட்டத்தை அமுலாக்க முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என திரு.கலன்சூரிய தெரிவித்தார்.

சகல அரச நிறுவனங்களிலும் தகவல் உத்தியோகத்தர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களுக்கு உரிய நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் பணிப்பாளர் நாயகம் கூறினார்.

9eb5fe68e2752a991d20ff91a1cdb543_XL

Related posts: