தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு ஒரு சுயாதீன நிறுவகமாக இருக்க வேண்டும் – அமைச்சர் டலஸ் அழகப்பெரும வலியுறுத்து!

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு ஒரு சுயாதீன நிறுவகமாக இருக்க வேண்டும் என்பதுடன் இது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக, அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் புதிய நியமனங்கள் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –
இந்த நிறுவனம் வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் கீழ் நிறுவப்பட்டிருந்தால் கூட, நியமனங்கள் தொடர்பாக சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நியமனங்கள் நாடாளுமன்றத்தின் விருப்பத்துடன் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கு அரசியல் ரீதியாக தலையிடுவதற்கு அமைச்சருக்கோ அல்லது வெகுஜன ஊடகத்துறை அமைச்சருக்கோ முடியாது.
அத்துடன், இந்த சட்டம் கடந்த அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட மிகவும் பிரத்தியேகமான சட்டமாகும்,
இது தொடர்பான திருத்தமூலத்தை மேற்கொள்ளும் போது எந்தவொரு அமைச்சின் விடயதானத்திற்கும் உட்படாத வகையில் சுயாதீன நிறுவகமாக ஏற்படுத்தப்பட்டால் தற்போதுள்ள சிறு குறைபாடுகளும் இருக்காது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
|
|