தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூலம் தொடர்பில் மக்களை தெளிவூட்டல்!
Sunday, July 17th, 2016தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூலம் தொடர்பாக மக்களை தெளிவூட்டும் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரச தகவல் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூலம் தொடர்பாக தெளிவூட்டுவது தேசிய தேவையாக மாறியுள்ளது என்று அரச தகவல் திணைக்களம் கூறியுள்ளது. அதன்படி நடைமுறைப்படுத்தப்பட உள்ள வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக ஊடகவியலாளர்கள் அறிவூட்டப்பட உள்ளனர்.
இலங்கை பத்திரிகை கலை சங்கத்துடன் இணைந்து இம்மாதம் 27ம் திகதி அரச தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் விஷேட ஊடக சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளது. பின்னர் தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூலம் தொடர்பாக மக்களை தெளிவூட்டுவதற்காக கருத்தரங்குகளை நடத்த நடவடிக்கை எடுப்பதாக அரச தகவல் திணைக்களம் கூறியுள்ளது.
Related posts:
இலங்கை பயங்கரவாதத் தாக்குதல்களில் 45 சிறுவர்கள் உயிரிழப்பு - ஐக்கிய நாடுகள் சபை!
இலங்கையில் ஒரே நாளில் 137 பேருக்கு கொரோனா தொற்று : சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு த...
விவசாயிகளை மறந்துவிட்டு பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியாது - பிரதமர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டு!
|
|