தகவலறியும் சட்டம் தொடர்பில் ஒரு வருடத்தில் 12 ஆயிரம் விண்ணப்பங்கள்!

Saturday, October 28th, 2017

தகவலறியும் உரிமைச் சட்டம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு வருடகாலத்தினுள் தகவல்களைக் கோரி அரச நிறுவனங்களுக்கு  12 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்று பதில்களும் தகவல்களும் வழங்கப்பட்டதாக தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பியதிஸ்ஸ ரணசிங்ஹ தெரிவித்துள்ளார்.

இச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு குறுகிய காலத்திற்குள் இவ்வளவு பெருந்கொகையான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றமையானது இலங்கை மக்கள் தகவலறியும் சட்ட மூலத்தின் மூலம் தகவல்களைப் பெற்றுக் கொள்வதில் மிகவும் ஆர்வமுடன் உள்ளமையை எடுத்துக்காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் தகவலறியும் உரிமைக்கான சட்டம் அமுலுக்கு கொண்டு வரப்பட்டு ஒரு வருட காலத்திற்குள் அதன் சகல மாநிலங்களிலிருந்து 50.000 விண்ணப்பங்கள் மாத்திரம் கிடைக்கப்பெற்றன.

இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சிறு தீவான இலங்கையில் கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்கள் மூலம் இலங்கை மக்களின் தகவலறியும் உரிமை பற்றிய அறிவு மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளமை தெளிவாகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

பொது மக்களால் கோரப்பட்ட தகவல்களை வழங்காமை தொடர்பாக 200க்கு மேற்பட்ட மேன் முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவற்றை விசாரணை செய்யவுள்ளதாகவும் தெரிவித்த அவர் மாகாணசபை மட்டத்தில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் மக்கள் தகவல்களைப் பெற முடியாத நிலை காணப்படுவதாகவும் இதற்கான தீர்வுகள் எதிர் காலத்தில் வழங்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: