ட்ரோன் கமரா இயக்குவோர் குறித்த தரவுகளை சேகரிப்பு – சிவில் விமான சேவைகள் அதிகார சபை!

Friday, May 1st, 2020

நாட்டில் தற்போது நிலவுகின்ற சூழலில் மருத்துவப் பொருட்களை விநியோகிப்பதற்காக ட்ரோன் கமராக்களை பயன்படுத்தும் நோக்கில், நாடளாவிய ரீதியில் ட்ரோன் கமராவை இயக்குபவர்கள் தொடர்பான தரவுகளை சேகரிக்க சிவில் விமான சேவைகள் அதிகார சபை தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து ட்ரோன் கெமரா இயக்கக்கூடியவர்களை பதிவு செய்துகொள்ளுமாறு சிவில் விமான சேவைகள் அதிகார சபை அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுவரை ட்ரோன் கமராவை இயக்கக்கூடிய 450 இற்கும் அதிகமானோர் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: