ட்ரோன் கமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் யாழ்.மாவட்டம்!

Wednesday, May 26th, 2021

யாழ்.மாநகரம் மற்றும் நகரை அண்டிய பகுதிகளை ட்ரோண் கமராக்கள் மூலம் கண்காணிக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விமானப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இன்று காலை யாழ்.நகரம், நல்லுாரை அண்மித்த பகுதிகள் அடங்கலாக பல இடங்களில், தீவிர கண்காணிப்பு நடவடிக்கையினை முன்னெடுத்திருக்கின்றனர்.

குறித்த ட்ரோண் கமரா கண்காணிப்பு பிரிவுடன் உடனடியாக செயற்படகூடிய பொலிஸ் மோட்டார் சைக்கிள் பிரிவு இணைக்கப்பட்டுள்ளது. குறித்த பிரிவு ட்ரோண் கமரா மூலம் அடையாளப்படுத்தப்படும் இடத்திற்குள் அதிரடியாக நுழைந்து பயணத்தடையை மீறுவோர் மற்றும் சுகாதார நடைமுறைகளை மீறுவோரை கைது செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: