டோக்கன் முறையானது அமைச்சின் தலையீட்டினால் மேற்கொள்ளப்பட்ட ஒன்றல்ல – மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Monday, July 4th, 2022

எரிபொருள் வழங்குவதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டோக்கன் முறையானது ஜூன் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் மாத்திரமே அமுலில் இருந்ததாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் எரிபொருள் இல்லாமல் தங்குவதைத் தடுப்பதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும், தற்போது IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் டோக்கன்கள் வியாபாரமாக மாறியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த டோக்கன் முறையானது எமது அமைச்சின் தலையீட்டினால் மேற்கொள்ளப்பட்ட ஒன்றல்ல. அந்த நேரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பாதுகாப்புப் படையினர் எடுத்த நடவடிக்கையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை டீசல் கப்பல்கள் மூன்றும், பெட்ரோல் கப்பல் ஒன்றும் எதிர்வரும் திகங்களில் இலங்கைக்கு வரவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதார்.

அதனடிப்படையில் எதிர்வரும் 8 ஆம் திகதிமுதல் 9 ஆம் திகதிக்கு உட்பட்ட காலத்தில் ஒரு கப்பலும், 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதிக்கு உட்பட்ட காலத்தில் ஒரு கப்பலும் இலங்கையை வந்தடையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதிக்கு உட்பட்ட காலத்தில் பெட்ரோல் கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அதே தினத்தில் டீசல் கப்பல் ஒன்றும் இலங்கையை வந்தடையவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

000

Related posts: