டொலர்களில் சுங்கத் தீர்வையை செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு மத்திய வங்கி, அரசாங்கத்திடம் கோரிக்கை!
Saturday, March 12th, 2022அமெரிக்க டொலர்களில் சுங்கத் தீர்வையை செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு மத்திய வங்கி, அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
அத்துடன் நாட்டில் நிலவிவரும் டொலர் பிரச்சினைக்கு தீர்வாக இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொலர்களில் சுங்கத்தீர்வை செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டால், சிலரிடம் கையிருப்பில் உள்ள டொலர்களை சந்தைக்கு கொண்டுவர முடியும் எனவும் மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
எவ்வாறெனினும், வழமையான முறையில் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு அனுமதிக்கப்பட முடியாது எனவும், அது தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கு உசிதமானதல்ல எனவும் இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அதி சொகுசு பண்டங்கள் இறக்குமதி செய்வதனை இரத்து செய்வதனை விடவும் அவற்றுக்கு கூடுதலாக வரி அறவீடு செய்வது மிகவும் பொருத்தமானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான தீர்வு எனவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|