டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட இலங்கையர்களுக்கு கொரோனா !

இந்திய தலைநகர் டெல்லியில் இடம்பெற்ற நிஜாமுதீன் மாநாட்டில் கலந்துகொண்ட நான்கு இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் இவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இருவர் நுவ் என்ற இடத்திற்கு நுழைய முற்பட்ட போது கடந்த 31ம் திகதி பல்வால் எல்லையில் வைத்து அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். ஏனைய இருவரும் உம்ரா என்ற கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு குருதி மாதிரிகள் சோதனை செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதியாகியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|