டெல்டா பரவுவதற்கு 15 நிமிடங்கள் போதும் – வெளியாட்களை வீட்டிற்குள் நுழைய அனுமதிக்காதீர் என ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் சிறப்பு வைத்தியர் எச்சரிக்கை!

Monday, August 16th, 2021

டெல்டா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் வீட்டில் இருக்கும் போது கூட முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குங்கள் என லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் சிறப்பு வைத்தியர் டாக்டர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்..

அத்துடன் வீட்டில் உள்ள ஒருவர் கழிவறை மற்றும் குளியலறையை பயன்படுத்திய 15 நிமிடங்களுக்குப் பிறகே, அதை மற்றவர்கள் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் வைரஸிலிருந்து தப்பிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைரஸ் இன்னொருவரை தொற்றுவதற்கு 15 நிமிடங்கள் வரையான காலப்பகுதியை எடுக்கின்றது.. ஆகவே ஆபத்தான இடங்களில் 15 நிமிடங்கள் அல்லது அதற்கும் மேல் முகக்கவசங்களை அகற்றுவதன் மூலம் நம்மில் இலகுவாக தொற்று ஏற்பட்டு விடும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்தியாவிலும் அமெரிக்காவிலும், டெல்டா வகை வைரஸ் குழந்தைகளிடையே வேகமாக பரவி வருவதால், உங்கள் குழந்தையை வீட்டுக்குள் வைத்துக்கொள்ளவும், வெளியாட்களை வீட்டிற்குள் நுழைய விடாதீர்கள் என்றும் வைத்திய நிபுணர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: