டெல்டாவால் மேலும் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் – மருத்துவர் அசேல குணவர்தன!

Thursday, July 22nd, 2021

டெல்டா கொரோனா தொற்றால் மேலும் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதில் 05 பேர் கெஸ்பாவ ஜம்புரலிய பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள் பகுப்பாய்வுக்காக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள தாகவும், முடிவுகள் கிடைத்தவுடன் அது தொடர்பாக துல்லியமான அறிக்கையை வெளியிட முடியும் என்றும் பரிசோதனை அறிக்கை வெளிவர இரண்டு வாரங்கள் ஆகும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts: