டெங்கை கட்டுப்படுத்த மலர்களில் தேனைப்பருகும் நுளம்புகள்

Saturday, June 24th, 2017

டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்கு மலர்களில் தேனைப்பருகும் நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தற்பொழுது இந்த டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட மலர்களில் தேனை பருகும் நுளம்புகளின் குடம்பிகள் பேராதனை பிரதேச சுற்றாடல் உள்ளிட்ட சில பகுதிகளில் விடுவிக்கப்பட்டுள்ளன.பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை தொடர்ந்தும் ஆய்விலேயே இருப்பதாக வைத்திய ஆய்வு நிறுவனத்தின் பிரதிப்பணிப்பாளர் டொக்டர் பிரதீப் ரத்னசேகர தெரிவித்துள்ளார். டெங்கு குடம்பிகள் பெருகுவதை தடுப்பதற்காக இந்த உயிரியல் கட்டுப்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts:

யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகளவு விபத்துக்கள் - மோட்டார் திணைக்களத்தின் விபத்து இணைப்பிரிவு!
கொரோனாவின் நான்காவது அலையை உருவாக்குவதை அரசியல்வாதிகள் தவிர்க்கவேண்டும் – அமைச்சர் நாமல் வலியுறுத்து...
வடக்கில் 4 ஆம் கட்ட கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம் - மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப...