டெங்கு நோய்: 2 ஆயிரத்து 272 பேர் பாதிப்பு – சுகாதார அமைச்சு!

Wednesday, January 22nd, 2020

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய் தொற்று காரணமாக 2 ஆயிரத்து 272 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு தெரிவித்துள்ளது.

டெங்கு நோய் தொற்று காரணமாக கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சுமார் 488 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த வருடம் மாத்திரம் ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 587 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: