டெங்கு நோய் : இதுவரை 400 பேர் மரணம்!

Thursday, November 9th, 2017

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 400 பேர் வரையில் டெங்கு நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் புள்ளிவிபரங்கள் தெரிவித்தள்ளன.

அத்துடன் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 502 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், புத்தளம், மட்டக்களப்பு, கல்முனை, கண்டி மற்றும் மாத்தறை போன்ற பிரதேசங்களில் டெங்குப் பரவல் அதிகம் உள்ள இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

Related posts: