டெங்கு நோய் அதிகரிக்கும் அபாயம் – எச்சரிக்கின்றது தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு!

Sunday, June 28th, 2020

ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களிலே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகக் கூடும் என தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் பருவப்பெயர்ச்சி மழை வீழ்ச்சி பதிவாவதன் காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 5 மாத காலப்பகுதியினுள் 21 ஆயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு, இரத்தினபுரி, கண்டி, காலி ஆகிய மாவட்டங்களிலே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: