டெங்கு நோய்த்தொற்றை தடுக்க துரித நடவடிக்கை – யாழ். பொலிஸார்!

Friday, March 17th, 2017

யாழ்ப்பாணப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நுளம்புப் பெருக்கத்திற்கு ஏதுவாக காணிகளை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இந்த ஆண்டில் 96 குடியிருப்பாளர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

என்று யாழ்ப்பாண பொலிஸ் நிலைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய்த் தொற்று அதிகரித்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. டெங்கு நுளம்புப் பெருக்கத்திற்கு ஏதுவான நிலையில் காணிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஜனவரி மாதம் முதல் நேற்றுவரை 96 குடியிருப்பாளர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் மன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டது கடந்த வருடம் 390 வழக்குகள் யாழ்ப்பாணப் பொலிஸாரால் பதிவு செய்யப்பட்டன. இந்த வருடம் யாழ்ப்பாணப் பொலிஸ் பிரிவில் டெங்கு நோய் தொற்றுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்தார். என்று பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, எதிர்வரும் 29ஆம் திகதி முதல் ஏப்ரல் 3ஆம் திகதிவரை டெங்கு ஒழிப்பு வாரமாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலம் 15 பொலிஸார், 15 சிறப்பு அதிரடிப் படையினர், 15 இராணுவத்தினர், கிராம அலுவலர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார மருததுவ அதிகாரிகள் டெங்கு உழிப்பு நடவடிக்கையில் ஈடபடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: