டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுக்காக உரிய நடவடிக்கை வேண்டும் – ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் திருமதி அனுசியா சந்துரு கோரிக்கை!

Thursday, November 15th, 2018

டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் திருமதி அனுசியா சந்துரு தெரிவித்துள்ளார்.

தற்போது மழைகாலம் ஆரம்பித்துள்ளமையால் மாநகரசபைக்குட்பட்ட பல பகுதிகளிலும் வெள்ளம் தேங்கி நிற்கும் நிலை காணப்படுகின்றது.

இதனால் நுளம்பின் பெருக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நுளம்பின் பெருக்கம் அதிகரிப்பதால் மீண்டும் டெங்கு நோயின் தாக்கம் மக்களிடையே அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில் யாழ் மாநகரப் பகுதியில் வாழும் மக்களின் நலன் கருதி யாழ் மாநகரின் சுகாதார பிரிவினரால் டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் மருந்துகளை தெளித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனிடையே யாழ்ப்பாணம் பலாலி வீதியையும் ஸ்ரான்லி வீதியையும் இணைக்கும் குறுக்கு வீதியான சிறாம்பியடி வீதியையும் அதன் மதவையும் புனரமைப்பு செய்யப்பட வேண்டும் என நான் பல தடவைகள் இச்சபையில் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அது ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் இதுவரையும் அதற்கான நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படாததன் காரணமாக தற்போது மழை காலம் என்பதால் அதனூடாக பயணிக்கும் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை தோன்றியுள்ளது.

எனவே இவ் வீதியை தற்காலிகமாகவேனும் புனரமைப்பு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.