டெங்கு நோயின் தாக்கம் வீழ்ச்சி – அமைச்சர் ராஜித!

Thursday, September 21st, 2017

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் காரணமாக டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 90 வீதம் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தகவல் வெளியிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில் இலங்கை முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளில் 900க்கும் குறைவான டெங்கு நோயாளர்களே சிகிச்சை பெற்று வருகின்றனர்.எனினும், எதிர்வரும் பருவ மழைக்காலத்தில் மீண்டும் டெங்கு தலைதூக்கும் அபாயம் காணப்படுகின்றது.இதனைக்கருத்திற் கொண்டு நேற்றைய தினம் தொடக்கம் ஒருவாரம் வரையிலான காலப்பகுதிக்கு நாடு தழுவிய ரீதியில் தொடர்ச்சியான டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு செயற்படுத்தவுள்ளது.இதற்காக முப்படையினருடன் இணைந்து சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மூவாயிரம் குழுக்கள் விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்

Related posts: