டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது – தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் எச்சரிக்கை!

இந்த ஆண்டில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தற்போது 15 மாவட்டங்களில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளது. எனவே, எதிர்காலத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகக்கூடும்.
புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் வழமை போன்று அலுவலகங்கள், பாடசாலைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளன.
இந்தநிலையில் குறித்த நிறுவனங்களில் டெங்கு ஒழிப்புக்கான திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
நகர் மற்றும் கிராமப் பகுதிகளிலும் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
|
|