டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நுளம்புகள் அதிகரித்துள்ளமையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
மேற்கு, தெற்கு, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களும், கண்டி மாவட்டமும் டெங்கு அனர்த்தம் கூடுதலாக உள்ள வலயங்களாக அடையாளப்படுத்த முடியும் என்று சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு தேசிய பிரிவு தெரிவித்துள்ளது.
நுளம்புகள் பெருகக் கூடிய இடங்கள் தொடர்பில் கூடுதலாக கவனம் செலுத்தி அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Related posts:
130 கோடி ரூபாவில் நாடெங்கும் 1,223 பாடசாலைகளுக்கு உதவி - கல்வி அமைச்சு வழங்கும்!
அதிபர் நியமனங்களுக்கான நேர்முகப் பரீட்சை 17ஆம் திகதி நிறைவு!
இந்தியாவிலிருந்து மேலும் 40 தொன் ஒக்சிஜன் நாட்டை வந்தடைந்தது!
|
|