டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Thursday, May 16th, 2019

கடந்த வாரங்களாக சில மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு ஒழிப்பு விசேட துறை ரீதியான வேலைத்திட்டமொன்று செயற்படுத்தப்படும் நிலையில், யாழ்ப்பாணம், குருணாகல் மற்றும் கேகாலை மாவட்டங்களில் டெங்கு நுளம்பு பரவுக்கூடிய 30க்கும் அதிகமான இடங்கள் காணப்படுவதாக குறித்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும், பாடசாலைகளில் 48 சதவீதமளவில் டெங்கு நுளம்பு பரவுவதற்கான ஏதுவானநிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts: