டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,000 ஐத் தாண்டியுள்ளது – தொற்றுநோயியல் பிரிவு எச்சரிக்கை!
Monday, December 11th, 20232023 ஆம் ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,000 ஐத் தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
டிசம்பர் 11 வரையிலான நிலவரப்படி, 2023 இல் மொத்தம் 80,222 நோயாளர்கள் பதிவாகியுள்ளன.
அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து 16,948 ஆக பதிவாகியுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், மேல் மாகாணத்தில் 37,216 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது மாகாண ரீதியாக அதிகபட்சமாக, டிசம்பர் மாதத்தில் 3,734 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதேவேளை, இந்த வருடத்தில் இதுவரை டெங்கு நோயினால் 47 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும், கொசு உற்பத்தியாகும் இடங்களை அழிக்கவும், சுகாதாரத்துறை அதிகாரிகள் மக்களை கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அரைவாசி கட்டணத்தையே அறவிட தீர்மானம் - அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் தலைவர் தெர...
அமைச்சரவை கூட்டம் நாளை - வெளிநாட்டு கையிருப்பு விவகாரம் குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் தகவல்!
ஒரு இலட்சம் மணிநேரத்தை நிறைவுசெய்தது எயார்பஸ் - பிரான்ஸிடம் மீள ஒப்படைக்கிறது ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ...
|
|