டெங்கு நுளம்பை ஒழிக்க புகை விசுறுதல் கட்டாயம்!

Friday, July 14th, 2017

நாட்டில் அதிகரித்துவரும் டெங்கு நுளம்பை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் புகை விசுறுதல் கட்டாயமாக வீடுகளில் முன்னெடுக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜயசுந்தர பண்டார இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். வீடுகளிலுள்ள இருட்டறைகளில் டெங்கு நுளம்புகள் அதிகளவில் தங்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் அந்த இடங்களில் கட்டாயமாக புகை விசுறுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை டெங்கு நோய் தொற்று காரணமாக 87 ஆயிரத்து 636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதி வரை டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்ட நான்காயிரத்து 996 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts: