டெங்கு நுளம்பு பெருக்கத்திற்கு ஏற்றவாறு குடியிருப்பை வைத்திருந்தோர் மீது வழக்கு!

Saturday, May 27th, 2017

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுத் தினத்தை முன்னிட்டு வலி.தென் மேற்கு பிரதேசத்தில் ஆயிரத்து 499 குடியிருப்புக்களில் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றன. அதில் 762 குடியிருப்புகளில் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய சூழல் இருந்தமை கண்டறியப்பட்டது. அதில் 14 குடியிருப்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. என வலி.தென்மேற்கு பிரதேச சபையின் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு தினங்களாக கடந்த 22,23ம் திகதி வடக்கு மாகாணத்தில் கடைபிடிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை வலி.தென்மேற்கு பிரதேச சபையினரால் முன்னெடுக்கப்பட்டது. டெற்கு நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் இனங்காணப்பட்ட சுதுமலை சாவல்கட்டு, மாகியம்பிட்டி ஆகிய இடங்களில் சுகாதாரப் பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

சுதுமலை, சாவல்கட்டு ஆகிய இடங்களில் கடந்த 22ஆம் திகதி 789 குடியிருப்புக்களில் நடத்திய சோதனையின் போது 371 குடியிருப்புக்களில் நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய சூழல் இருந்தமை கண்டறியப்பட்டன. இதேபோல் மறுநாள் மாகியம்பிடட்டியில் 710 குடியிருப்புக்களில் நடைபெற்ற சோதனையின் போது 391 குடியிருப்புக்களில் நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய சூழல் இருந்தமை அறியப்பட்டது. அதில் 7 குடியிருப்புக்களில் குடம்பிகள் இருந்தன

இந்த நிலையில் நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய சூழலை வைத்திருந்த 762 குடியிருப்பாளர்களுக்கு சுகாதாரப் பரிசோதகர்களால் எச்சரிக்கை வழங்கப்பட்ட. சுற்றுச்சூழலைச் சுத்தமாக வைத்திருக்குமாறும் அவர்களுக்கு அததிகாரிகள் அறிவுறை வழங்கினர். இதேவேளை குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்ட 18 குடியிருப்பாளர்களில் 14பேருக்கு எதிராக பொலிஸார் மல்லாகம் நீதிவான் மன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது

Related posts: