டெங்கு நுளம்புகளை ஒழிக்க ஜேர்மன் தொழில்நுட்பம் – சுகாதார அமைச்சர்!

Thursday, January 23rd, 2020

டெங்குநுளம்புகளை முற்றாக ஒழிப்பதற்கு நச்சு அற்ற சுற்றாடலுக்கு ஏற்றமுறைமையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

ஜேர்மன்நாட்டைச் சேர்ந்த டொனெட் பீட்டர் ஹெடர் எனும் பேராசிரியர் இப் புதிய முறைமையைதம்மிடம் அறிமுகப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்  –

இலங்கை வந்துள்ள பேராசிரியர் சுகாதார அமைச்சில் வைத்து சுற்றாடலுக்கு ஏற்ற இப்புதிய டெங்குநுளம்புகளை அழிக்கும் முறை தொடர்பில் உரௌயாடினார்.

இதற்கமைய,தாவரங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்படும் பச்சையம் (கிளோரோபில்) மூலம் டெங்கு நுளம்புகளை அழிக்க முடியுமெனவும் பேராசிரியர்தெரிவித்தார்.

டெங்குநுளம்புகளை அழிப்பதற்காக தற்போது பயன்படுத்தப்படும் இரசாயன முறைமைகளால் நுளம்பின் குடம்பிகள் மட்டுமன்றி சுற்றாடல் பாதிப்புக்குள்ளாகுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் தாவரங்களிலிருந்துபிரித்து எடுக்கப்படும் பச்சையம்(கிளோரோபில்) சூரியஒளி பட்டதும் இரசாயனமாக மாறி டெங்கு நுளம்பின்குடம்பிகளை முற்றாக அழிக்கின்றன.

எனவே இப்பச்சையத்தை செலவின்றி சாதாரண இலைகள், பற்கள் மற்றும் வாழையிலைகளிலிருந்து பெற்றுக் கொள்ள முடியுமென்றும் பேராசிரியர் கூறியதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

Related posts:

குடாநாட்டில் ஜனநாயக சூழ்நிலையை தோற்றிவித்தவர்கள் நாம் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செ...
சுகாதார பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் ஆபத்தான நிலையை சந்திக்க நேரிடும் - சுகாதாரப் பிரி...
அரசாங்கம் கொரோனா சவாலையும் எதிர்கொண்டு நாட்டின் பொரளாதாரத்தையும் பாதுகாத்துள்ளது – அமைச்சர் நாமல் தெ...