டெங்கு தொற்று தொடர்பில் மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை!

Tuesday, June 2nd, 2020

டெங்கு தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொறிமுறை ஒன்றுக்காக தயராகுமாறு மாகாண ஆளுநர்கள், உள்ளூர் அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதியும் பிரதமரும் பணிப்புரைகள் விடுத்துள்ளனர்

மழைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் டெங்கு தொற்றுக்கான ஏதுக்கள் இருப்பதை அடுத்தே இந்த பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் மேல்மாகாணத்திலேயே டெங்கு தொற்று அதிகமாக பரவி வருகிறது. எனவே இதனை தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை இது தொடர்பாக ஜனாதிபதி செயலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது கடந்த வருடத்தைக் காட்டிலும் இந்த வருட முதல் காலாண்டில் டெங்கு தொற்று குறைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இந்தநிலையில் பாடசாலைகள்,வைத்தியசாலைகள், பணியகங்கள் போன்ற இடங்களை சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற யோசனை குறித்து பேசப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts: