டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை அறிவித்தார் ஆஸி. வெளிவிவகார அமைச்சர்!

Thursday, July 20th, 2017

டெங்கு நோயை ஒழிப்பதற்கான வேலைத்திட்டத்தை  இலங்கை வந்த அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிஷப் அறிவித்துள்ளார்.வெளிவிவகார அமைச்சர் ரவிகருணாநாயக்க மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன ஆகியோரை சந்தித்தப் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்

இந்த வேலைத்திட்டத்துக்காக உலக சுகாதார ஸ்தாபனம் முதற்கட்டமாக 58 மில்லியன் ரூபாவை வழங்கவுள்ளதுஇந்த நிதி இலங்கையில் டெங்கு ஒழிப்பை மேற்கொள்வதற்கான அவசர கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக பயன்படுத்தப்படவுள்ளது.

வேலைத்திட்டத்தின் அடுத்தக்கட்டமாக, அவுஸ்திரேலியாவின் மொனாஸ் பலக்கலைக்கழகம், இலங்கையின் சுகாதார அமைச்சுடன் இணைந்து டெங்கு ஒழிப்பு தொடர்பான ஆய்வினை இலங்கையில் நடத்தவுள்ளதுஇதற்காக அவுஸ்திரேலியாவின் ஆய்வு நிறுவகம் 116 மில்லியன் ரூபாய்களை குறித்த பல்கலைக்கழகத்துக்கு மானியமாக வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

.

Related posts: