டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் கல்வி அமைச்சு விஷேட அறிவிப்பு!

பாடசாலைகள், ஆசிரியர் கலாசாலைகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
அத்துடன் நிறுவனங்களின் துப்புரவு தொழிலாளிகள், பாடசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பூங்கா பணியாளர்கள் உள்ளிட்ட கல்விசாரா ஊழியர்களிடம் தூய்மைபடுத்தும் நடவடிக்கைகள் குறித்த பொறுப்பினை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலை அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் பழைய மாணவர் ஒன்றியங்கள் போன்றவற்றின் உதவியையும் பெற்றுக் கொண்டு பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை தூய்மைபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சு வலக் கல்விப் பணிப்பாளர்களக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகள் கொவிட்-19 வைரஸ் கட்டுப்படுத்தல் நியதிகளுக்கு உட்பட்ட வகையில் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|