டெங்கு ஒழிப்புக்கு அவுஸ்திரேலியாவின் நிதி உதவி!

Friday, February 9th, 2018

இலங்கை மக்களை நீண்டகாலமாக பாதித்த டெங்கு ஆட்கொல்லியின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் உதவ முன்வந்துள்ளது.

இதற்காக அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் அம்மையார் பத்து இலட்சம் டொலரை வழங்குவது பற்றி யோசனை கூறியிருந்தார். இதனடிப்படையில் இலங்கை அரசாங்கம் மொனாஷ் பல்கலைக்கழகத்தின் நுளம்பு ஒழிப்பு சர்வதேச திட்டத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.

இதன் பிரகாரம் இலங்கையில் நுளம்புகள் மூலம் பரவும் டெங்கு முதலான நோய்களுக்கான வைரஸ்களை கட்டுப்படுத்த இரு தரப்புக்களும் கூட்டு நடவடிக்கை  எடுக்கவுள்ளன.

மேலும் உலக நுளம்பு ஒழிப்பு திட்டத்தின் கீழ் ஆய்வுகள் நடத்தப்பட்டிருந்தன. அந்த ஆய்வுகளில் சோதிக்கப்பட்ட வொல்போஷியா என்ற பற்றீரியா நுண்ணுயிரைஇலங்கையில் பயன்படுத்தி டெங்கு நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நுண்ணுயிருக்கு ஸிக்கா, சிக்குன்-குன்யா முதலான நோய்களை கட்டுப்படுத்தும்ஆற்றலும் உண்டென கண்டறியப்பட்டுள்ளது.

Related posts: