டெங்கு ஒழிப்புக்கான தேசிய வேலைத்திட்டம்

Wednesday, May 3rd, 2017

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரட்ன துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

இவ்வா அண்டின் இதுவரையான காலப்பகுதியில் 33 ஆயிரத்து 151 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். இதில் 61 பேர் உயிரிழந்துள்ளனர்.கொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், களுத்துறை, குருநாகல், புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை ஆகிய பன்னிரண்டு மாவட்டங்களில்  டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது.இந்த மாவட்டங்களில் டெங்கு நோய் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படும். இதற்காக கல்வி அமைச்சின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பாடசாலைகளை சுத்தப்படுத்தியதன் பின்னர் பொலிஸாரும், சுகாதார அதிகாரிகளும் அது தொடர்பான அறிக்கைகளை உறுதிப்படுத்தி சமர்ப்பிப்பது அவசியமாகும்.டெங்கு நுளம்புக் குடம்பிகள் இருக்குமாயின், அதனை ஒரு மாதத்திற்குள் அழிப்பதற்கான அவகாசம் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்படும்.  இந்தக் காலப்பகுதியில் இதனை மேற்கொள்ளத் தவறும் அதிபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: