டெங்கு இரத்த பரிசோதனை கட்டணம் மீளவும் உயர்வு?

Saturday, July 8th, 2017

டெங்கு இரத்த பரிசோதனை கட்டணங்கள் மீளவும் உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ ஆய்வு கூடங்களில் டெங்கு நோய் குறித்த இரத்த பரிசோதனை மற்றும் இரத்த பரிசோதனைகளுக்காக அறவீடு செய்யும் தொகையை குறைக்க வேண்டும் என கடந்த 19ம் திகதி சுகாதார அமைச்சு உத்தரவிட்டிருந்தது.

தனியார் வைத்தியசாலை கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் இவ்வாறு விலை குறைப்பு குறித்த அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இரத்த பரிசோதனைக்கான கட்டணம் 250 ரூபாவாகவும் டெங்கு இரத்த பரிசோதனைக்கான கட்டணம் உச்ச பட்சமாக 1000 ரூபாவாகவும் அமைய வேண்டுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இன்றைய தினம் தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வு கூடங்களில் இரத்த பரிசோதனைக்கான கட்டணமாக 510 ரூபாவும் டெங்கு இரத்த பரிசோதனைக்காக 1980 ரூபாவும் அறவீடு செய்யப்பட்டுள்ளது.டெங்கு நோய் துரித கதியில் பரவி வரும் நிலையில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளமை மக்களை விசனமடையச் செய்துள்ளது.

Related posts: