டெங்குவால் 5622 பேர் நடப்பாண்டில் பாதிப்பு – சுகாதார அமைச்சு தகவல்!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நடப்பாண்டில் நேற்றுவரை 5ஆயிரத்து 622 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவினர் தெரிவித்தனர்.
தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவினர் நேற்றைய தினம் வெளியிட்ட புள்ளிவிபரத்தகவல்களிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது :
டெங்கு நோய் பரவும் மாவட்டங்களில் யாழ்ப்பாணக்குடாநாடும் உள்ளடங்குகிறது. அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் கடந்த ஜனவரியில் 625பேரும் பெப்ரவரியில் 478பேரும் ஏப்ரலில் 499பேரும் மே மாதத்தில் 301பேரும் ஜூலையில் 376பேரும் ஆகஸ்டில் 290பேரும் அக்டோபரில் 593பேரும் நவம்பரில் 509பேரும் இந்த மாதம் நேற்று வரை 459பேருமாக 5 ஆயிரத்து 622 டெங்கு நோயாளர்கள் குடாநாட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றனர். கடந்த காலங்களில் குடாநாட்டில் பெய்து வரும் கன மழையின் தாக்கத்தாலும் வெளிமாவட்டத்துக்குச்சென்று வருபவர்களாலும் டெங்கு நோய்த்தொற்று ஏற்ப்படுகின்றது என்றள்ளது. டெங்கு நோயை கட்டுப்படுத்தும் செயற்த்திட்டங்கள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சிறப்பாக யாழ்ப்பாணம் நல்லூர் கோப்பாய் உடுவில் சங்கானை கரவெட்டி சண்டிலிப்பாய் பரித்தித்தறை மற்றும் தெல்லிப்பழை ஆகிய சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைகளுக்கு உட்ப்பட்ட பகுதிகளில் இந்தச்செயற்றிட்டங்கள் வெகுவாக முன்னெடுக்கப்பட்டள்ளன. அதனால் தற்போது ஓரளவுக்கு டெங்கு நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் சுகாதாரத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
Related posts:
|
|