டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் 2 ஆயிரத்து 394 வீடுகள் பார்வை!

Sunday, December 3rd, 2017

யாழ்ப்பாணம் மாநகரசபைப் பிரதேசத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கையின் போது 2 ஆயிரத்து 394 வீடுகள் பார்வையிடப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டது.

இதில் 23 குடியிருப்புப் பகுதிகளில் நுளம்புக் குடம்பிகள் காணப்பட்டதால் அந்தக் குடியிருப்பாளர்களுக்கு எதிராகச் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எனவும் அதனைவிட 141 குடியிருப்புக்கள் போதிய சுகாதார வசதிகளின்றிக் காணப்பட்டதால் உடனடியாக அவற்றைத் துப்புரவாக்கக் கோரி சிவப்பு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன என மாநகர சுகாதார அதிகாரி பணிமனை தெரிவித்தது.

Related posts: