டீசலை ஏற்றிய மேலும் இரு கப்பல்கள் இலங்கை வருகை – நாட்டில் போதுமான பெட்ரோல் கையிருப்பில் உள்ளதாகவும் எரிசக்தி அமைச்சு அறிவிப்பு!

Wednesday, March 2nd, 2022

டீசலை ஏற்றிய மேலும் இரு கப்பல்கள் இன்றும் (02) நாளையும் (03) நாட்டை வந்தடையவுள்ளன.

இவற்றில் ஒரு கப்பலில் 33,000 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசலும் (Auto Diesel) 7,000 மெட்ரிக் தொன் சூப்பர் டீசலும் (Super Diesel) உள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர். ஓல்கா தெரிவித்துள்ளார்.

மற்றைய கப்பலில் 28,000 மெட்ரிக் தொன் டீசல் (Diesel) மற்றும் 9,000 மெட்ரிக் தொன் விமானத்திற்கான எரிபொருள் ( Jet Fuel) காணப்படுவதாகவும் அமைச்சின் செயலாளர் நாயகம் கூறியுள்ளார்.

குறித்த கப்பல்களுக்கான கடன் கடிதங்களை தயார்ப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் தற்போது போதுமான பெட்ரோல் கையிருப்பில் உள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எண்ணெயை ஏற்றிய மேலும் இரு கப்பல்கள் எதிர்வரும் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர். ஓல்கா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு எரிபொருள் ஏற்றிவரும் எந்தவொரு கப்பலும் நிராகரிக்கப்படவில்லை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து எரிபொருள் கொள்கலன் மாதிரிகளும் முறையான சோதனை நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடமும் இது தொடர்பில் வினவியதாகவும் மாதிரி எதுவும் நிராகரிக்கப்படவில்லை எனவும் உறுதிப்படுத்தியுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

கடுமையான டீசல் நெருக்கடியை அடுத்து நாடு முழுவதிலுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் விநியோகத்தைக் கட்டுப்படுத்து வதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தா பனம் (CPC) நேற்றுமுதல் நடவடிக்கை எடுத்துள்ளது.

எண்ணெய் சேமிப்பு முனையங்களுக்கு இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது நான்கு நாட்களுக்கு டீசல் இருப்பு உள்ளதாகவும், எனவே அந்தப் பங்குகளை நிர்வகிக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

000

Related posts:

வார இறுதியின் பின்னர் எரிபொருள் தட்டுப்பாடு இருக்காது - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!
கபொ.த உ.த பரீட்சை பெறுபேறுகள் ஜூன் மாதம் வெளியாகும் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர நம்ப...
கிரிக்கெட் அணியை மீள கட்டியெழுப்புவதற்கு முன்வாருங்கள் - புதிய இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவர் அர...