டீசலின் உற்பத்தி வரி உயர்வு!

Friday, August 26th, 2016

டீசல் லீற்றர் ஒன்றுக்கான உற்பத்தி வரி 10 ரூபாவால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் இந்த வரி அதிகரிப்பு ஓகஸ்ட் 20ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்படுகின்றது..

இதன்படி புதிய வரியாக டீசல் லீற்றர் ஒன்றுக்கு 13 ரூபாய் அறவிடப்படும். இந்த புதிய வரி அதிகரிப்பு காரணமாக சந்தையில் உள்ள டீசல் விலை அதிகரிக்கப்படாது என தெரிவிக்கப்படுகின்றது.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் அதன் பயனை அரசாங்கத்துக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் டீசலின் உற்பத்திவரி 10 ரூபாயால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Related posts: