டில்ஷானுக்கு வந்த சோகம்!

அதிரடி துடுப்பாட்ட வீரரான திலகரட்ன டில்ஷான் நீதிமன்றத்தில் முன்னிலையாகாதமையால் நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்தது. இருப்பினும் இன்றைய தினம் சட்டத்தரணி ஊடாக மனு ஒன்றை வழங்கி கொழும்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
சட்டத்தரணியால் வழக்கு தினம் சரியாக பதிவு செய்யப்படாதமையின் காரணமாகவே இன்று நீதிமன்றத்தில் சரணடைவதற்கு காரணம்.எனது முன்னாள் மனைவியை சட்டரீதியாக பிரிந்து சென்றத்தினை அடுத்து அவருக்கும், பிள்ளைகளுக்கு வழங்கவேண்டிய பணம் தொடர்பிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதன் படி முன்னாள் மனைவிக்கு 300 இலட்சம் ரூபாயும், குழந்தைகளுக்காக 40 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளேன்.ஆனால், முன்னாள் மனைவி கோருவதற்கு அமைவாக நான் கடின உழைப்பால் பெற்றுக் கொண்ட பணத்தை வீணாக செலவு செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும், நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இரத்து செய்யுமாறும், மீண்டும் அடுத்த வழக்கு தினத்தின் போது நீதிமன்றத்தில் முன்னிலையாவதாகவும், சட்டத்தரணி மூலம் உறுதியளித்துள்ளார்.
Related posts:
|
|