டில்ஷானின் தாராள மனசு : வறுமையில் தவித்த குடும்பம் மீட்சிகண்டது!

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் டில்ஷான் ஒரு ஏழை குடும்பத்துக்கு வீடி கட்டித்தர முன்வந்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக வலம் வந்தவர் டில்ஷான். இவர் கடந்த மாதம் சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெற்றார்.இந்நிலையில் மாத்தளையில் வறுமையில் வாடி வரும் 2 மகள் மற்றும் அவர்களுடைய தாய்க்கு ஒரு வீடு கட்டிக் கொடுத்து, உதவ முடிவு செய்துள்ளார்.
டில்ஷான் கூறுகையில், இந்த குடும்பத்தை பற்றி செய்தியில் பார்த்தேன். அவர்கள் அடமானத்தில் உள்ள தங்களது இடத்தை மீட்கக் மக்களிடம் உதவி கோரி இருந்தனர். இந்நிலையில் அவர்களை நான் நேரில் சந்தித்த போது தான் அவர்கள் மிகவும் வறுமையில் இருப்பது தெரியவந்தது. அலுமினியம் ஷீட் மற்றும் பாலிதீன் பைகளை கொண்டு கட்டப்பட்ட வீட்டில் அவர்கள் இருந்தனர்.
குடும்பத் தலைவர் 5 மாதங்களுக்கு முன் மின்சாரம் தாக்கி இறந்ததால் அந்த குடும்பம் மிகவும் வறுமையில் தள்ளப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் இருக்கும் பள்ளிகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்களால் தான் அந்த குடும்பம் உயிர் வாழ்ந்து வருகிறது.
நான் ஏற்கனவே அவர்களுக்கு வீடி கட்டிக் கொடுக்க தேவையான திட்டத்தை வழங்கிவிட்டேன். 3 அல்லது 4 மாதங்களில் இந்த பணி முழுமையாக முடிந்துவிடும். ஒரு மில்லியன் ரூபாய் வரை செலவாகும் என்று நினைக்கிறேன் என்றார்.
மேலும், நான் இந்த 10 ஆண்டுகளில் எந்தவித தகவலும் இன்றி வறுமையில் உள்ள 500க்கும் மேற்ப்பட்டோருக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறேன். இப்போது கூட அந்த குடும்பம் உதவி கோரி இருந்த ஊடகம் தான் இந்த தகவலை வெளியிட்டதாக தெரிவித்துள்ளார்.
தற்போது குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிட்டு வரும் டில்ஷான், “Dilshan with Youth” என்ற பெயரில் சமூக பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

Related posts:
|
|