டிப்பரால் இடித்துக் கொலை: பருத்தித்துறையில் சம்பவம்!

பருத்தித்துறை முதலாம் கட்டை பகுதியைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை சிவபாலன்( வயது 48) என்பவர் டிப்பரால் இடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பேக்கரி உரிமையாளரான இவர் இன்று சனிக்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் அவரது நண்பர்களுடன் மதுபானம் அருந்திக்கொண்டிருந்துள்ளார்.
அதன் போது ஏற்பட்ட தகராற்றின் பின்னர், அவர் அங்கிருந் சென்ற சமயம், அவரது எதிரியான டிப்பர் சாரதி, டிப்பரால் மோதி கொலை செய்துள்ளார்.
சிவபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் பின்னர், 43 வயதுடைய சாரதி பருத்தித்துறை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், உயிரிழந்த சிதம்பரபிள்ளை சிவபாலன் 3 பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
எதிர்வரும் 4ஆம் திகதி எஞ்சியுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரலுக்கான அறிவிப்பு !
தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் இராணுவ தளபதியின் விஷேட அறிவிப்பு!
உலக ஊடகவியலாளர்கள் மாநாடு சியோல் நகரில் ஆரம்பம் - இலங்கை உட்பட 25 நாடுகளை சேர்ந்த 35 பேச்சாளர்கள் சி...
|
|