டிஜிட்டல் பிறப்பத்தாட்சி பத்திரத்தில் நீக்கப்படுகின்றது முக்கிய பகுதி – பதிவாளர்கள் நாயகம் எம்.சீ. விதானகே தெரிவிப்பு!
Friday, July 17th, 2020அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய டிஜிட்டல் பிறப்பத்தாட்சி பத்திரத்தில் பெற்றோர் திருமணமானவர்களா/ இல்லையா என்ற பகுதி நீக்கப்பட்டுள்ளதாக பதிவாளர்கள் நாயகம் எம்.சீ. விதானகே தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதி பிள்ளைகளுக்கு பாதிப்பானது என்பதால், பழைய பிறப்பத்தாட்சி பத்திரத்தில் இருந்த இந்த பகுதியை புதிய பிறப்பத்தாட்சி பத்திரத்தில் உள்ளடக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்களின் வசதிகளுக்காக இம்மாத இறுதிக்குள் பிறப்பு, மரணம் மற்றும் திருமண பதிவு சான்றிதழ்களின் பிரதிகளை வழங்கும் அலுவலகம் ஒன்றை குடிவரவு, குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம் ஆகியன அமைந்துள்ள இசுருபாயவில் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பதிவாளர்கள் நாயகம் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அனைத்து பாலியல் இணையத்தளங்களுக்கும் தடை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
யாழில் சீரற்ற வானிலை காரணமாக 5,908 குடும்பங்கள் பாதிப்பு!
மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்க நடவடிக்கை – வடக்கின் அளுநர் அறிவிப்பு!
|
|