டிஜிட்டல் அடையாளத் திட்டத்திற்கு இந்திய உதவியை பெறுவதற்கு இரு நாடுகளும் உடன்படிக்கை!

Tuesday, February 8th, 2022

இலங்கையில் அமுல்படுத்தப்படவுள்ள டிஜிட்டல் அடையாளத் திட்டத்திற்கு இந்திய உதவியை பெறுவதற்கு இரு நாடுகளும் உடன்படிக்கைக்கு வரவுள்ளன.

இந்நிலையில் அதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள தனிநபர்களின் பயோமெட்ரிக் தரவுகளின் அடிப்படையில் தனிநபர்களின் அடையாளத்தைச் உறுதிப்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

டிஜிட்டல் மற்றும் உடல் சூழல்களில் ஒருவரின் அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய அடையாளங்காணல் இந்த டிஜிட்டல் அடையாள கட்டமைப்பின் கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

2019 டிசம்பரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு இடையே நடந்த இருதரப்பு சந்திப்பில், டிஜிட்டல் அடையாள கட்டமைப்பை செயல்படுத்துவதற்கு நிதியுதவி வழங்க இந்திய அரசு இணக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: