டிசம்பர் 7 வரை கருணாவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

எதிர்வரும் டிசம்பர் 7ம் திகதி வரை முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணாவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் முன்னிலையில் இன்றைய தினம் ஆஜராகிய போது கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட் போதே நீதிமன்றம் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளது..
அரசாங்க வாகனங்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்து நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் அழைக்கப்பட்ட கருணா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெற்றிலையை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை!
புறா வளர்ப்பினால் ஏற்பட்ட முரண்பாடு – பெண்கள் குழுவால் தாக்கப்பட்ட இளைஞர் பரிதாபப் பலி!
பால் உற்பத்தியை இரட்டிப்பாக்கும் 27 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்தில் இலங்கை கைச்சாத்து!
|
|