டிசம்பர் 1ஆம் திகதி நள்ளிரவு முதல் தனியார் பேருந்துகள் பணிபகிஷ்கரிப்பு!

Friday, November 25th, 2016

தண்டப்பணம் 25,000 ரூபாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் டிசம்பர் 1ம் திகதி நள்ளிரவு முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அனைத்து மாகாணங்களுக்குமான தனியார் உரிமையாளர் பேருந்து சங்கம் அறிவித்துள்ளது.

குறித்த தண்டப்பணம் குறித்து டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தமது சங்கம் ஜனாதிபதியுடன் கலந்தாலோசிக்க உள்ளதாகவும், ஆலோசனையில் தீர்வு கிடைக்காதவிடத்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் அதன் செயலாளர் சரத் விஜிதகுமார் நேற்று(24) தெரிவித்துள்ளார்.

pvt-bus

Related posts: