டிசம்பர் விடுமுறையில் சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள்!

Thursday, January 18th, 2018

டிசம்பர் மாத விடுமுறை காலத்திலேயே க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகளை பூர்த்தி செய்ய கல்வி அமைச்சுதீர்மானித்துள்ளது.

இதற்காக பல பாடசாலைகளை மூட வேண்டிய அதேவேளை ஆசிரியர்களும் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்படுகின்றது. இதனால்மாணவர்களில் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வருடம் முதல் பாடசாலை விடுமுறை காலத்திலேயே விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை நிறைவு செய்வது தொடர்பான நடவடிக்கைகள்துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: