டிசம்பர் மாதம் இறுதிக்குள் நலன்புரி கொடுப்பனவுகளுக்கு பொருத்தமானவர்களைத் தெரிவு செய்ய நடவடிக்கை நிறைவடையும் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Sunday, November 6th, 2022

நலன்புரி கொடுப்பனவுகள் மற்றும் பொது உதவிகளைப் பெறுவதற்கு மிகவும் பொருத்தமானவர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் நிறைவடையும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதுவரையில் உதவிகள் கிடைக்காத 8 இலட்சம் விண்ணப்பதாரிகள் இதற்காக விண்ணப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் களப்பணியாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் உதவியை பெற்று நிவாரணங்களை பெற தகுதியான நபர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: